உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

 அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கோ ரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் 4 வது நாளாக நடந்த போராட்டத்திற்கு, சங்க மாவட்ட செயலாளர் பிரேமா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஷீலா முன்னிலை வகித்தார். பொருளாளர் பரிதாபேகம் வரவேற்றார். அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு பென்சன் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தேசிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். கோடை விடுமுறை வழங்க வேண்டும். தற்காலிகமாக பணி நீக்கம் செய்யும் காலத்திற்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் போது 10 ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை 50 சதவீத அடிப்படையில் சேர்க்க வேண்டும். ஆய்வு கூட்டங்களுக்கு வந்து செல்ல பயணப்படியாக மாதந்தோறும் ரூ.300 வழங்க வேண்டும் உட்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வள்ளி, லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை