உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசம்பட்டு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரசம்பட்டு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1995ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளி கால பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள், பள்ளிக்கு நாற்காலிகள் வழங்கினர். மேலும் பெற்றோர்களை இழந்த மாணவ மாணவிகளுக்கு நல உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை