உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடிப்படை வசதிகள் கேட்டு அரியாந்தக்கா மக்கள் மனு

அடிப்படை வசதிகள் கேட்டு அரியாந்தக்கா மக்கள் மனு

கள்ளக்குறிச்சி : அரியாந்தக்கா கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உட்பட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த அரியாந்தக்கா ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரியாந்தக்கா பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதாகியதால் 8 மாதங்களுக்கு முன் உடைக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிதாக நீர்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக, ஆதிதிராவிடர் பகுதிக்கு ஒதுக்கப்படும் பணிகள் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே, எங்கள் பகுதியில் நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும். மேலும், கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை, மின்கம்பம் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !