மேலும் செய்திகள்
கார் மோதி பெண் பலி
05-May-2025
கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
16-May-2025
சின்னசேலம்: முன்னாள் முதல்வர் ஜெ., அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி சின்னசேலம் நகர அ.தி.மு.க., சார்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை 26ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம், விழா மேடை பணிகளை பார்வையிட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு கூறுகையில், 'தமிழகத்திலேயே மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள, 126 அடி உயர கம்பத்தில், 600 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்சி கொடியை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, 10 சினை மாடுகள், 100 ஆடுகள், 'எலைட்' பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற 10 மாணவ, மாணவியருக்கு லேப்டாப், விவசாயிகளுக்கு ஸ்பிரேயர் மற்றும் மிக்ஸி, கிரைண்டர், டேபிள் பேன், கடப்பாறை, மண்வெட்டி, களக்கட்டு, ஹாட்பாக்ஸ், சில்வர் பாக்ஸ் சேலை, 3 அடுக்கு கேரியர் உள்ளிட்டவைகளை 5,771 பேருக்கு வழங்குகிறார்' என்றார்.சின்னசேலம் பேரூராட்சி துணை சேர்மன், நகர செயலாளர் ராகேஷ், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
05-May-2025
16-May-2025