மேலும் செய்திகள்
போதையில் சிறுவன் கொலை
05-Oct-2024
புரட்டாசி பொங்கல் புரவி எடுப்பு விழா
03-Oct-2024
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வி.சி., மாநாட்டின் போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்த 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.உளுந்துார்பேட்டையில் கடந்த 2ம் தேதி வி.சி., சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடந்தது. அப்போது மாநாட்டிற்காக வந்த வாகனங்களால் அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே போக்குவரத்து பாதித்தது.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் அய்யனார், வாகனங்களை போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் செல்லுமாறு வாகன ஓட்டிகளிடம் கூறினார். அப்போது விழுப்புரம் அடுத்த கெடார் பகுதியைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள், 24; உள்ளிட்ட சிலர் போலீஸ்காரர் அய்யனாரிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டனர்.இது குறித்து அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வெங்கடேசபெருமாள் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதிந்து வெங்கடேச பெருமாளை கைது செய்தனர்.
05-Oct-2024
03-Oct-2024