மேலும் செய்திகள்
கலைஞர் கனவு இல்ல திட்டம் பயனாளிகள் 'உஷார்'
24-May-2025
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவது தொடர்பாக கலெக்டர் ஆய்வு செய்தார். முகையூர் ஒன்றியம் சு.பில்ராம்பட்டு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கப்பட்டது. பயனாளிகள் வீடுகள் கட்டுவது தொடர்பாக விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நேரில் ஆய்வு செய்தார். பணி ஆணை பெற்ற பயனாளிகளின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று குடியிருப்பு வீடுகளை விரைந்து கட்டுவது தொடர்பாக பயனாளிகளிடம் கேட்டறிந்தார். கட்டுமானப் பணியினை விரைந்து துவங்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து அரகண்டநல்லுார் பேரூராட்சியில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது முகையூர் பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்தர், ஜெகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
24-May-2025