மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
30-Oct-2024
தி.மலையில் புரட்டாசி பிரதோஷ வழிபாடு
16-Oct-2024
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த விளந்தை அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருக்கோவிலூர் அடுத்த விளந்தையில் அமைந்துள்ள பழமையான அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு, மருந்து சாற்றி, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.அதிகாலை 4:00 மணிக்கு நான்காவது கால வேள்வி பூஜை, பிரதான கலச பூஜை, 5:45 மணிக்கு மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி 8:00 மணிக்கு மூலவர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் மூலஸ்தான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
30-Oct-2024
16-Oct-2024