உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் 142 பேருக்கு உதவித் தொகை

அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் 142 பேருக்கு உதவித் தொகை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் 142 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் அன்புக் கரங்கள் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஏ.கே.டி., தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் கலந்து கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள், உறவினர்கள் பாதுகாப்பில் வளரும் குழந்தைகள் என மொத்தம் 142 பேருக்கான உதவித் தொகை வழங்கினார். இந்த உதவித் தொகை பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வி தொடரும் வகையில் 18 வயது வரை மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்து டன் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளைய ராஜா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்ட அலுவலர் அருணா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை