உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரவில் பனிப்பொழிவு பகலில் கடும் வெயில் மக்கள் அவதி

இரவில் பனிப்பொழிவு பகலில் கடும் வெயில் மக்கள் அவதி

தியாகதுருகம்,: இரவில் பனிப்பொழிவும் பகலில் கடும் வெப்பமும் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாத 3வது வாரத்தில் தாமதமாக தொடங்கி ஜனவரி மாத இறுதியில் முடிந்தது. அதைத்தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் பகலில் அதிகரித்து துவங்கியது. இருப்பினும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகரித்து அதிகாலையில் கடுமையாக குளிர் வீசுகிறது. எதிரெதிர் மாறுபட்ட பருவநிலை நிலவுவதால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக முதியவர்கள் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் பகல் வேளையில் கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் உடலில் கொப்புளங்களும் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.காலை 8:00 மணி வரை குளிர் தாக்கம் இருக்கிறது. அதன் பிறகு துவங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை குறையாமல் நீடிக்கிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ