உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயி மீது தாக்குதல்

விவசாயி மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி செக்குமேட்டு தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம்,67; இவருக்கு சித்தலுார் கிராமத்தில் உள்ள ஒரு ஏக்கர் 64 செண்ட் நிலத்தில், உளுந்து பயிரிட்டுள்ளார். கடந்த 31 ம் தேதி காலை 10 மணிக்கு சித்தலுார் காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜீ,52; உளுந்து பயிரை உழுவு செய்து அழித்துள்ளார். இதனையறிந்த வேலாயுதம், அவரது உறவினர் அய்யாக்கண்ணு ஆகியோர் சித்தலுார் சென்று கோவிந்தராஜீயிடம் கேட்டபோது திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வரஞ்சரம் போலீசார் கோவிந்தராஜீ மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை