உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அவ்வையார் விருது : விண்ணப்பிக்க அழைப்பு

 அவ்வையார் விருது : விண்ணப்பிக்க அழைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தமிழக அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1.5 லட்சம் காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினவிழாவின்போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசு விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) காணலாம். தகுதியான நபர்கள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ