உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சின்னசேலம்; சின்னசேலம் சிறுமலர் பள்ளியில் சின்னசேலம் போலீசார் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் நேற்று அதே பகுதியில் உள்ள சிறுமலர் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு குட்கா மற்றும் மது போன்ற போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் தகராறில் ஈடுபடுவோர் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை