உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சங்கராபுரம்: சங்கராபுரம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டிரைவர் மற்றும் உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் ஜோசப் சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாராள் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தனியார் பள்ளிகள் டி.இ.ஓ., விஷ்ணுமூர்த்தி பங்கேற்று பேசியதாவது. நிகழ்ச்சியில் ஓட்டுனர்கள் வாகனங்களை சீராக இயக்க வேண்டும். பாதுகாப்பாக இயக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வாகன பராமரிப்பை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். முன்னே செல்லும் வாகனத்தை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும். பின்னால் வரும் வாகனங்களுக்கு பாதுகாப்பாக வழி விட வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கினர். கூட்டத்தில் பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி