உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி

சங்கராபுரம் : சங்கராபுரம் வட்டாரத்தில் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள செம்பராம்பட்டில், வேளாண்மை துறை முலம் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், வட்டார வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ், துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் வரவேற்றார். அரசு பள்ளி மாணவர்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வேளாண்மை அலுவலர்கள் வெங்கடேசன், அப்பாஸ், ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா,உதவி மேலாளர் லோகப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ