விழிப்புணர்வு பேரணி..
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சைகை மொழி தினம் மற்றும் சர்வ தேச காதுகேளாதோர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேரணியை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று, செவித்திறன் குறையுடையோரை அரவணைத்து பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தி னர். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ், காதுகேளாதோர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.