ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் அருண்ராஜ், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் லஞ்சம், ஊழல் இல்லாத சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் தைரியத்துடன் முன்வரவேண்டும், லஞ்சம், ஊழல் எந்தெந்த வகையில் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதை தடுக்க முயற்சிக்க வேண்டும், ஊழல் தொடர்பான புகார் இருந்தால் அதை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியப்படுத்தலாம், தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, லஞ்சம் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. வணிக மேலாண்மை துறைத்தலைவர் ராஜா, தமிழ்த்துறை தலைவர் பிரவீனா மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி டீன் அசோக் நன்றி கூறினார்.