உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அய்யனார் கோவில் கும்பாபிேஷகம்

அய்யனார் கோவில் கும்பாபிேஷகம்

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி அய்யனார் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் தேவதா, நவகிரஹ ேஹாமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, லட்சுமி ேஹாமம், பூர்ணாஹூதி, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரஹனம், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், அஷ்டபந்தனம் சாத்தல் கண் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து, நேற்று காலை 6 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, சேம கும்ப பூஜை பிம்பசுத்தி, கோ பூஜை, நாடி சந்தானம், தத்துவர்ச்சனை, மூலமந்திர ேஹாமம் நடத்தப்பட்டது. காலை 10 மணியளவில் கோவில் கலசத்திற்கும், விநாயகர், முருகன், முனியப்பன் மற்றும் அய்யனார் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. சுற்று வட்டார பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை