தங்க கவசத்தில் பாலசுப்ரமணியர் அருள் பாலிப்பு
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் மருத்துவமனை சாலையில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம், சுவாமிக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. பரனுார் அம்பலவாணன் தலைமையிலான சிவனடியார் குழுவினரின் பக்தி பாடல் இசை நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.