உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வங்கி ஊழியர் சங்கம் வேலை நிறுத்த போராட்டம்

வங்கி ஊழியர் சங்கம் வேலை நிறுத்த போராட்டம்

கள்ளக்குறிச்சி : அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பு செயலாளர் முத்தையன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடுதல், வங்கியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், தொழிலாளர் நல விரோத சட்ட தொகுப்புகளை திரும்பபெறுதல், வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதில், பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ