ஏரிகளில் குளிக்க தடை
கள்ளக்குறிச்சி: 'தினமலர்' செய்தி எதிரொலியாக சங்கராபுரம் பகுதி ஏரிகளில் தண்ணீர் முழு கொள்ளவை எட்டியுள்ளதால், ஏரியில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.கல்வராயன்மலையில் மழை பெய்ததால், ஆறுகள், ஏரிகளில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், சங்கராபுரம் பகுதி ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.எனவே ஏரிகளில் பொதுமக்கள், குழந்தைகள் குளிப்பதற்கு இறங்கினால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ஏரிகளில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டியிருந்தது.அதன் தொடர்ச்சியாக சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராம ஏரிக்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரியில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏரியில் இறங்கவோ, குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது என எச்சரிக்கை செய்து அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.