உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விழா மேடை அமைக்க பூமி பூஜை

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விழா மேடை அமைக்க பூமி பூஜை

சங்கராபுரம் : சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்னர்வீல் சார்பில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு இன்னீர்வீல் கிளப் தலைவி இந்துமதி தலைமை தாங்கினார். முன்னாள் தலைவிகள் தீபா, மஞ்சுளா, அகல்யா, சுபாஷினி, கவுரி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) வேதநாயகி வரவேற்றார். முன்னாள் தலைவி கலாவதி ஜார்த்தனன், பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி ஆகியோர் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி டிரஸ்ட் தலைவர் ஜனார்த்தனன், ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் செல்வமணி, விஜயகுமார், குசேலன், சக்திவேல், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இன்னீர்வீல் கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இன்னீர்வீல் கிளப் செயலாளர் ஜெயசக்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை