மேலும் செய்திகள்
பொரசக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
25-Jul-2025
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் நிழற்குடை கட்டும் பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தியாகதுருகம் பஸ் நிலையம் எதிரில் சேலம் -- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி நிழற்குடை அமைக்க, மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிழற்குடை பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், பி.டி.ஓ., கொளஞ்சி வேல் முன்னிலை வகித்தனர். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். தி.மு.க. நிர்வாகிகள் நுார் முகமது, எத்திராஜ், கணேசன், நெடுஞ்செழியன், பாலு, அப்போலியன், அருட்செல்வன், மகாதேவி, பாலாஜி, சிவகுமார், கோவி முருகன், சிலம்பரசன், அஜித்குமார், பிரதீப்குமார், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
25-Jul-2025