| ADDED : அக் 12, 2024 07:26 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பைக் - மொபட் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மாணவர் உட்பட இருவர் இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த திருக்கனங்கூரைச் சேர்ந்தவர் அமாவாசை, 56; விவசாயி. இவர், நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் டி.வி.எஸ்., மொபட்டில் மூரார்பாளையத்திற்கு புறப்பட்டார்.அழகாபுரம் பிரிவு சாலை அருகே சென்ற போது, பிரம்மகுண்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரான ஏழுமலை மகன் முனீஷ் (எ) முனியப்பன், 19; ஓட்டி வந்த கே.டி.எம்., பைக், அதே திசையில் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்ற ஆற்று மாமனந்தலைச் சேர்ந்த சங்கர், 37; மீது மோதி, எதிர்திசையில் வந்த அமாவாசை மீதும் மோதியது.இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே அமாவாசை இறந்தார்.படுகாயமடைந்த முனீஷ், சங்கர் ஆகியோர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனீஷ் என்கிற முனியப்பன் இறந்தார். சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.