உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் விபத்து: விவசாயி பலி

பைக் விபத்து: விவசாயி பலி

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே பைக்கில் சென்ற போது கீழே விழுந்த விவசாயி உயிரிழந்தார். சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டை சேர்ந்தவர் வாசுதேவன்,53; விவசாயி. இவர் கடந்த, 10ம் தேதி இரவு 11:00 மணிக்கு, பைக்கில் சங்கராபுரம் சென்று பின் மீண்டும் வீடு திரும்பினார். வடசேமபாளையம் அருகே வந்த போது எதிரே வந்த வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தில் தெரியாமல் சாலையோரம் கொட்டி வைத்திருந்த எம்.சான்டில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்தவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி