உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி மீது பைக் மோதல் : வாலிபர் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல் : வாலிபர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேரை சேர்ந்தவர் முனிராம்சிங் மகன் ஆகாஷ் , 27; இவர் கடந்த 19ம் தேதி இரவு தனது பைக்கில் நெடுமானுாருக்கு சென்றார். ரோடுமாமாந்துார் பகுதியில் சென்ற போது, முன்னாள் சென்ற லாரி எவ்வித சைகையின்றி திடீரென இடதுபக்கமாக திரும்பியது. அப்போது, ஆகாஷ் ஓட்டி சென்ற பைக், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சேலம் மாவட்டம், நாவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வெள்ளீஸ்வரன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ