மேலும் செய்திகள்
பிள்ளைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
18-Sep-2024
கள்ளக்குறிச்சி: தென்கீரனுாரில் கொத்தனாருக்கு சொந்மான கே.டி.எம்., பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை சேர்ந்தவர் கருப்பைய மகன் யோகேஸ்வரன்,23; கொத்தனார். இவர் கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் கிராமத்திற்கு டிஎன்55 பிஎம்4816 என்ற பதிவெண் கொண்ட கே.டி.எம்., பைக்கில் வந்து தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். கடந்த 14ம் தேதி யோகேஸ்வரன் பணிபுரியும் கட்டடத்திற்கு அருகே பைக்கினை நிறுத்தியுள்ளார். பணி முடிந்து சில மணி நேரங்களுக்கு பிறகு பார்த்த போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன பைக்கினை கண்டுபிடித்து தரக்கோரி யோகேஸ்வரன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
18-Sep-2024