திருவிழாவில் பைக்குகள் திருட்டு
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே தொடர் பைக் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அஜித்குமார்,25; இவர் நேற்று முன்தினம் வரகூர் கிராமத்தில் நடந்த முருகன் கோவில் திருவிழாவிற்கு பைக்கில் சென்றுள்ளார். அங்கு கோவில் அருகே பைக்கை நிறுத்தி விட்டு பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக் திருடுபோனது தெரியவந்தது. அதேபோல் சங்கராபுரம் அடுத்த ஆரூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் தேவேந்திரன்,35; இவர் தனது ் பைக்கினை வரகூரில் உள்ள உறவினர் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு திருவிழாவிற்கு சென்று பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக் திருடு போனது தெரிந்தது. இது குறித்து இருவரும் தனி தனியாக கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.