உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ஜ., ஆலோசனைக் கூட்டம்

பா.ஜ., ஆலோசனைக் கூட்டம்

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டில் பா.ஜ., சார்பில் சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் அழகேசன், மாவட்ட நிர்வாகி ஷாம் சுந்தர், ஒன்றிய பொருளாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் பேசினார். கூட்டத்தில், சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், ரிஷிவந்தியம் தொகுதியில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கான உறுதிமொழி ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய நிர்வாகிகள் சின்ன கவுண்டர், கோபால், ராஜதுரை, சுதாகர், ராஜா, இளங்கோவன், தர்மன், கருணாநிதி, செல்வராஜ், செந்தில், முருகன், பார்த்திபன், அன்பு, தேவி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை