உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்

பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில் பா.ஜ., சார்பில் தேசியகொடி ஊர்வலம் நடந்தது.பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கொடுத்த பதிலடியை கொண்டாடும் வகையில் மணலுார்பேட்டை பா.ஜ., சார்பில் தேசியகொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.ஊர்வலம் காந்தி சிலையிலிருந்து துவங்கியது. செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பார்த்திபன், நிர்வாகிகள் வெங்கடேசன், ஏழுமலை, பாலாஜி, சேகர், சுரேஷ் முன்னிலை வகித்தனர். பேரணி ஆஞ்சநேயர் கோயில் அருகே ஊர்வலம் நிறைவடைந்தது.ஊர்வலத்தில், பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், முன்னாள் ராணுவத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !