மேலும் செய்திகள்
தமிழக உரிமை மீட்பு பயணம் அன்புமணி பிரசாரம்
15-Aug-2025
கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மாடூர் டோல்கேட்டில் மாவட்ட பா.ஜ., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி உலகங்காத்தானில் பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமாரின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்பதற்காக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி வந்தார். அவருக்கு மாடூர் டோல்கேட் அருகே மாவட்ட பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீசந்த், மாவட்ட பொது செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர்கள் முத்து, கோவிந்தசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சதிஷ், வர்த்தக பிரிவு மாவட்ட துணை தலைவர் கண்ணன், மாவட்ட நிர்வாகி பெரியசாமி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம்சுவாமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் தேவசந்திரகுமார், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், இளைஞரணி மாவட்ட பொது செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் மாநில தலைவருக்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கூட்டணி கட்சி சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் அய்யப்பா ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு கும்ப கலசம் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
15-Aug-2025