உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இமாகுலேட் கல்லுாரியில் ரத்த தான முகாம்

இமாகுலேட் கல்லுாரியில் ரத்த தான முகாம்

சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த விரியூர் இமாகுலேட் மகளிர் கல்லுரியில் சங்கராபுரம் ரோட்டரி, புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.ரோட்டரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் லில்லிமேரி, செயலாளர் பினியன் மேரி முன்னிலை வகித்தனர். புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார். டாக்டர் சுகன்யா ரத்ததானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.முகாமில் கல்லுாரி மாணவிகள் 50 பேர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில். அரசு மருத்துவகல்லுாரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயகுமார், முன்னாள் ரோட்டரி தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோட்டரி செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி