மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
16-Dec-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ் சங்க நுால் வெளியீட்டு விழா நடந்தது. கல்லை தமிழ் சங்க தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். தொட்டியம் தமிழ் சங்க தலைவர் பொன்னப்பிள்ளை, ஏ.கே.டி., கல்வியியல் கல்லுாரி முதல்வர் பருவத அரசி, கல்லை தமிழ் சங்க துணை தலைவர் அம்பேத்கர் முன்னிலை வகித்தனர். சங்கராபுரம் திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி திருக்குறள் விளக்கவுரை வழங்கினார். கள்ளக்குறிச்சி ஆக்சாலிஸ் பள்ளி 3ம் வகுப்பு மாணவி சிவன்யா சங்க இலக்கியத்தில் வரும் 96 வகையான பூக்களின் பெயரை பட்டியலிட்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் நடந்த கருத்தரங்களில் பங்குபெற்று தாயகம் திரும்பிய சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்பராயனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கல்லை தமிழ் சங்க சிறப்பு தலைவர் கோமுகி மணியன், பொருளாளர் சண்முகம், பகுத்தறிவு இலக்கிய மன்ற தலைவர் ஜெயராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பரிக்கல் சந்திரன் எழுதிய கம்பனும், வம்பனும் எனும் நுாலினை கள்ளக்குறிச்சி மனவளக்கலை மன்ற நிர்வாக அறங்காவலர் தங்கவேல் வெளியிட்டார். நுாலினை பெற்ற முத்தமிழ் முத்தன், சவுந்திரராஜன், ராபியாபேகம், வளர்மதி செல்வி, காயத்திரி ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். கல்லை தமிழ் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.
16-Dec-2025