மதுபாட்டில் விற்றவர் கைது
கச்சிராயபாளையம்; எலியத்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலமையிலான போலீசார் நேற்று காலை 8 மணியளவில் எலியத்துார் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் 42, என்பவர் அவரது வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த கச்சிராயபாளையம் போலீசார் சக்திவேலை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.