உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அண்ணனை தாக்கிய தம்பி கைது

அண்ணனை தாக்கிய தம்பி கைது

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் மகாராஜா, 53. இவரது தம்பி சாரங்கபாணி, 40; இருவருக்கும் இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சாரங்கபாணி, அவரது மனைவி ஜெயம்மாள் ஆகியோர் மகாராஜாவை சரமாரியாக தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவியும் தாக்கினர்.இது குறித்து மகாராஜா கொடுத்த புகாரின் பேரில், சாரங்கபாணி மற்றும் அவரது மனைவி ஜெயம்மாள் ஆகியோர் மீது அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து சாரங்கபாணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை