உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒருவரை தாக்கிய சகோதரர்கள் கைது

ஒருவரை தாக்கிய சகோதரர்கள் கைது

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே ஒருவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்களை போலீசார்கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் போஸ்கோ மகன் சசிகுமார், 23; இவர், சிறுவங்கூர் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் ஜோசப்ராஜ், 23; என்பவரது பைக் பெட்ரோல் இல்லாமல் நின்றுள்ளது.இது குறித்து அறிந்த ஜோசப்ராஜ் மனைவி, சசிகுமாரிடம் 100 ரூபாயை கொடுத்து, தனது கணவரிடம் தருமாறு தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ஜோசப் ராஜ், தனது மனைவியிடம் ஏன் பணம் வாங்கினாய் என கேட்டு, சசிகுமாரை தனது சகோதரர் ஜெபின்ராஜ் உடன் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.காயமடைந்த சசிகுமார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, ஜோசப்ராஜ், 23; ஜெபின்ராஜ், 27; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ