உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே, தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கச்சிராயபாளையம் அடுத்த மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி அலமேலு, 55; இவர் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி காலை 10:00 மணிக்கு, அலமேலு விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதில் அலமேலு அடுப்பில் விழுந்ததில், பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை