திறன் வளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் இலவச குறுகிய கால திறன் வளர் பயிற்சி பெற கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், செவிலியர், மர சிற்பக்கலை, கணினி, கேட்டரிங், தையல், ஏ.சி., டெக்னீசியன் உள்ளிட்ட இலவச குறுகிய கால திறன் வளர் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இதற்கு கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள், விதவைகள் ஆகியோர் நலவாரிய இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.பயிற்சியின் போது, போக்குவரத்து செலவுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். பகுதி அல்லது முழு நேரமாக பயிற்சி பெறலாம். பயிற்சி முடிக்கும் பெண்களுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். தகுதிவாய்ந்த பெண்கள் தங்களது பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட தகவல்களை வழங்கி பதிவு செய்யலாம். நாளை மற்றும் நாளை மறுதினம், கல்வராயன்மலை தாலுகா; வரும், 12ம் தேதி உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் முகாம் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.