உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

ரிஷிவந்தியம்: ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்திட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் வேளாண் உதவி இயக்குநர் ஷியாம்சுந்தர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இயற்கை இடர்பாட்டால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ரபி பருவத்தில் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைந்த பிரிமிய தொகை செலுத்தி அதிகப்பட்ச காப்பீடு செய்து பயனடையலாம்.பிரிமிய தொகை ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.511; உளுந்து ரூ.228; மக்காச்சோளம் ரூ.308, பருத்தி ரூ.483 செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். நெல் மற்றும் உளுந்துக்கு நவ., 15ம் தேதி வரையிலும், மக்காச்சோளம், பருத்திக்கு நவ., 31ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம். பொது சேவை மையம், தேசிய வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சிட்டா, அடங்கல், ஆதார் வங்கி கணக்கு எண் நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை