மேலும் செய்திகள்
லாரி மீது பைக் மோதல் தொழிலாளி பலி
20-Oct-2025
ரிஷிவந்தியம்: துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கார் டிரைவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வாணாபுரம் பகண்டைகூட்ரோட்டை சேர்ந்தவர் வேலு மகன் ராஜா,35; கார் டிரைவர். இவருக்கு அதிக கடன் இருப்பதால் மனஉளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ராஜா சாப்பிட்டு விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து இவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் செல்ல முயன்ற போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் அச்சமடைந்து கதவை உடைத்து பார்த்த போது, ராஜா துாக்குப்போட்டுக்கொண்டுள்ளார். உடன் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Oct-2025