உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது இடத்தில் மது 18 பேர் மீது வழக்கு

பொது இடத்தில் மது 18 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய 18 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துவதால் தகராறு, வாகன விபத்து உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இதை தவிர்க்க பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தும் நபர்கள் மீது போலீசார், வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.அதன்படி, கள்ளக்குறிச்சி உட்கோட்ட போலீசார் நேற்று முன்தினம் மேற்கொண்ட ரோந்து பணியின் போது, பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பாக சின்னசேலம் காவல் நிலையத்தில் 5 பேர், கீழ்குப்பம் மற்றும் வரஞ்சரம் காவல் நிலையங்களில் தலா 2 பேர், தியாகதுருகம் மற்றும் கள்ளக்குறிச்சி காவல் நிலையங்களில் தலா 4 பேர், கச்சிராயபாளையத்தில் ஒருவர் என மொத்தமாக 18 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை