உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவியைக் கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

மனைவியைக் கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனைவியைக் கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் மனைவி சுஜிதா, 26; திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. சில நாட்களாக மனைவி சுஜிதா மீது சந்தேகப்பட்டு தனசேகரன் அடிக்கடி தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார்.இதற்கு உடந்தையாக மாமியார் நல்லம்மாள் மற்றும் உறவினர் பிரேமா ஆகியோர் இருந்துள்ளனர்.இது குறித்து சுஜிதா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் கணவர் தனசேகரன், மாமியார் நல்லமாள், பிரேமா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு வழக்கு

கச்சிராயபாளையத்தைச் சேர்ந்த ராகவேந்திரன் மனைவி கீர்த்தனா, 26; திருமணமாகி ஒராண்டு ஆகிறது. திருமணத்தின் போது சீர்வரிசையாக வீட்டிற்கு தேவையான பொருட்கள், 38 சவரன் தங்க நகை கொடுத்துள்ளனர்.இந்நிலையில், ராகவேந்திரன், மாமனார் அன்பழகன், மாமியார் பேபி ஆகியோர் கீர்த்தனாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.இது குறித்து கீர்த்தனா கொடுத்த புகாரின் பேரில் ராகவேந்திரன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை