உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது விற்பனை 4 பேர் மீது வழக்கு

மது விற்பனை 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில் விற்றது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்குப்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெவ்வேறு பகுதிகளில் மதுபாட்டில் விற்றது தொடர்பாக, தென்சிறுவள்ளூரை சேர்ந்த துரைசாமி மனைவி பாஞ்சாலை, அம்மகளத்துாரை சேர்ந்த ரங்கசாமி மகன் தவமணி, நீலமங்களத்தை சேர்ந்த மோகன் மகன் கார்த்திகேயன், கலையநல்லுாரை சேர்ந்த முத்து மகன் கிருஷ்ணமுத்து ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அவர்களிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ