உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவிக்கு வெட்டு கணவர் மீது வழக்கு

மனைவிக்கு வெட்டு கணவர் மீது வழக்கு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மனைவியை வெட்டிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த பெருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன், 75; மனைவி பூபதி, 65; இவர், கடன் அதிகமான தால், பெங்களூரு சென்று வேலை செய்து கடனை அடைக்கலாம் என கணவரை அழைத்தார். இதனால் ஆத்திரமடைந்த கோடீஸ்வரன் மனைவி பூபதியை கத்தியால் தாக்கினார்.புகாரின் பேரில் கோடீஸ்வரன் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி