உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் மீது வழக்கு

சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை: சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் கிராமம் அக்ரகாரத் தெருவில் கடந்த நான்கு நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறி திருநாவலூர் மின்வாரிய அலுவலகம் முன்பு 10க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொது இடத்தில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி சந்திரா, 55; உட்பட 10 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி