முன்விரோத தகராறு 12 பேர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பொது வழி பயன்படுத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அயோத்தி, 52; விவசாயி. இவருக்கும் அதே பகுதி சேர்ந்த ஜெயபால் என்பவருக்கும் பொதுவழி பயன்படுத்துவது சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு 7:00 மணியளவில் இரு குடும்பத்திற்கு இடையே திடீர் வாய் தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இது குறித்து இருதரப்பின் அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் செங்குறிச்சியை சேர்ந்த வர்கள் அயோத்தி, குமார், ஏழுமலை, ரஞ்சித், பழனி, செந்தில் முருகன், ஜெயபால், ஜெயக்குமார், உட்பட 12 பேர் மீது வழக்கு பதிந்து அயோத்தி, 52; கிருஷ்ணன் மகன் பழனி, 37; சுப்பிரமணியன் மகன் ராஜ்குமார், 38; கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜேஷ், 29; ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.