உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒருவரை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

ஒருவரை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மனைப்பிரிவு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி ஜெயா கார்டன் 2வது தெருவைச் சேர்ந்தவர் மாலிக், 43; இவருக்கு சொந்தமான கள்ளக்குறிச்சியில் மனைபிரிவு உள்ளது. கடந்த 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு விளாந்தாங்கல் சாலையைச் சேர்ந்த கோபு, 45; கருணா புரம் வேலுமணி, 45; ஆகியோர் மனை பிரிவின் இரும்பு கேட்டை உடைத்து அத்து மீறி நுழைந்து உள்ளே இருந்த பேனர்கள் மீது பெயிண்ட் அடித்துள்ளனர்.இதனையறிந்த மாலிக், இருவரிடமும் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து மாலிக் கொடுத்த புகாரின் பேரில், கோபு, வேலுமணி ஆகியார் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை