உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி; திருக்கோவிலுார் அருகே ஒருவரை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் முகமது சர்தார்,60; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ேஷக்பாபு மகன் ஷாஜகான் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் உள்ளது. இதனால் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த, 28ம் தேதி ஷாஜகான் தரப்பினர் முகமது சர்தாரை கொடுவாளால் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஷாஜகான், சிக்கந்தர் மகன் அப்பு, சந்துரு மகன் மணி ஆகிய, 3 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை