மேலும் செய்திகள்
கணவர் மாயம் மனைவி புகார்
25-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி மஞ்சுளா, 28; இருவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து வசிக்கின்றனர். இதனால், மனமுடைந்த விஜயகுமார் கடந்த 18ம் தேதி விஷம் குடித்தார். உடன் அவரது அவரது குடும்பத்தினர் விஜய குமாரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் உள்ள விஜயகுமாரை பார்ப்பதற்காக அவரது மனைவி மஞ்சுளா கடந்த 20ம் தேதி மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, விஜயகுமாரின் உறவினர்கள் ஜெயராமன் மனைவி லட்சுமி, ரவிக்குமார், இவரது மனைவி வெண்ணிலா ஆகிய மூவரும் மஞ்சுளாவை திட்டி, தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில், லட்சுமி, ரவிக்குமார், வெண்ணிலா ஆகிய 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Oct-2025