உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சிறுமி திருமணம் தொடர்பாக, 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் சூர்யா,23; இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்தனர். இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில், சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், கடந்த மே மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து தியாகதுருகம் ஊர்நல அலுவலர் சாந்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த சூர்யா, அவரது தந்தை பழனிவேல், தாய் அலமேலு மற்றும் சிறுமியின் தந்தை மாயக்கண்ணன், தாய் விஜயா ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ'வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை