மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
24-Nov-2024
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையத்தில் பைக்கை அடமானம் வைத்த தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கச்சிராயபாளையம், பிரபாகரன் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் முருகன், 38; இவர், வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கோபிநாத், 27; என்பவரிடம் தனது பைக்கை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். வெற்றிவேல் முருகன் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.இதனால் நேற்று முன்தினம் இரவு வெற்றிவேல் முருகன் மற்றும் கோபிநாத் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.புகாரின் பேரில், இருதரப்பை சேர்ந்த கோபிநாத், மனோ, வெற்றிவேல் முருகன், சின்னதுரை, ஐயப்பன் ஆகிய 5 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Nov-2024